திண்டுக்கல், தேனியில் - மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம் :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்போருக்கு பட்டா கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் விஏஓ அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

திண்டுக்கல்லில் 34, 44, 45 வார்டுகளுக்குட்பட்ட அண்ணா காலனி, பர்மா காலனி, சாமியார் தோட்டம், சவேரியார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 60 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படாத நிலை உள்ளது.

தொடர் போராட்டம் நடத்தியும் பலன் இல்லாததால், நேற்று காலை சிறுமலை செட் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுடன் வந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். கட்சியின் நகர்க்குழு உறுப்பினர்கள் ஜோதி பாசு, ஜெயசீலன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசினர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் விரைவில் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

தேனி

வருசநாடு மலைப்பகுதி விவ சாயிகளுக்கு பட்டா கேட்டு தேனி ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டச்செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் செயலாளர் வெங்கடேசன், விவ சாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் பெ.சண் முகம் சிறப்புரை ஆற்றினார். வருச நாடு மலைப்பகுதி விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். அங்கு விவசாயம் செய்ய தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் போஸ், மார்க்சிஸ்ட் முனீஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர் இ.தர்மர், மணவாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்