பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஊரக சாலைகள் குறித்த கருத்தரங்கு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி வரவேற்றார். கூடுதல் ஆட்சியர் வே.சரவணன் கருத்தரங்கின் நோக்கம் குறித்துபேசினார். ஊரக சாலை பராமரிப்பு, சாலை கட்டமைப்பில் புதிய தொழில்நுட்பம் குறித்து மாநில தரக் கட்டுப்பாட்டு அலுவலர் எம்.முத்துவள்ளியப்பன், தார் மற்றும் எமல்சன் தொழில்நுட்பம் குறித்து இந்துஸ்தான் கோலாஸ் நிறுவன தொழில்நுட்ப பொறியாளர் எஸ்.ஸ்மித் சார்லஸ் ஆகியோர் பேசினர். மாவட்ட ஊராட்சித் தலைவர் சத்யா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் ஆட்சியர் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டத்தில் 403 கிராம ஊராட்சிகள் உள்ளன. மொத்தம் 2,682கிராம சாலைகள் உள்ளன. இவை மொத்தம் 3,022 கிலோ மீட்டர் நீளம் உடையது. பிரதமமந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 2020-2021-ல் ரூ.30.31 கோடி செலவில் 14 சாலை பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, மொத்தம் 59 கிலோ மீட்டர்தூர சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி சாம்பல், தும்பு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சாலைகள் அமைப்பது, பழைய சாலைகளை பராமரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago