திருநெல்வேலி பெருமாள்புரம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட விரிவாக்க பகுதியில் குற்றநிகழ்வுகளை தடுப்பது குறித்து,இப்பகுதி நலச்சங்க நிர்வாகிகளுடன் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர்அண்ணாதுரை, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம்சன், நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சாமி. நல்ல பெருமாள், பொருளாளர் கோபால கிருஷ்ணன், குடியிருப்போர் நலச்சங்க தலைவர்களான நியூகாலனி ஆறுமுகம், ஏ -காலனிஇளங்கோ, சாரோன் நகர் செல்வராஜ், திருநகர் பாலசுப்ரமணியன், மகிழ்ச்சி நகர் பாலச்சந்திரன், திருமால் நகர் பிச்சையா, அழகர்நகர் முத்து செல்வம், ராமச்சந்திரா நகர் சக்திபிரபாகரன் வினோ, டிரைவர்ஸ் ஒ.ஏ. காலனி முத்துதுரை, பெருமாள்புரம் சி - காலனிபொன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காலி மனைகள், மாநகராட்சி பூங்காக்கள், மாநகராட்சி குளங்கள் உள்ளிட்ட இடங்களில் மது அருந்துதல்,போதை பொருட்கள் பயன்படுத்துதல் போன்ற சமூகவிரோத செயல்களை தடுக்க வேண்டும். விரிவாக்கப் பகுதியில் மாநகர எல்லையில் காவல் சோதனைச்சாவடி அமைத்தல் மற்றும் புறக்காவல் நிலையம் அமைத்து கண்காணிக்க வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒவ்வொரு காலனி நுழைவு வாயில் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். இரவு நேரத்தில் காவல்துறையினர் இருசக்கர வாகன ரோந்து வரவேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago