திருவண்ணாமலையில் - 125 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல் :

By செய்திப்பிரிவு

தி.மலையில் 125 மாற்றுத்திறனாளி களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜோதிலிங்கம் நேற்று வழங்கினார்.

தி.மலை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், புதிதாக தேசிய அடையாள அட்டை பெற முடியாமல் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப் பட்டனர்.

இந்நிலையில், தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் புதிதாக அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அப்போது, தி.மலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து வந்த 140-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், அடையாள அட்டை கேட்டு மனு கொடுத்தனர். அவர் களது மனுக்களை பரிசீலனை செய்து, 125 பேருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜோதிலிங்கம் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், திங்கள்கிழமை யில் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படவில்லை என்றாலும், மக்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமை, ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்