தி.மலை, செய்யாறு அரசு கலை கல்லூரிகளில் - மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது :

By செய்திப்பிரிவு

தி.மலை அரசு கலைக் கல்லூரியில் 2021-22-ம் கல்வியாண்டில் இளங்கலை முதலாமாண்டு(பிஏ, பி.காம், பிபிஏ, பிஎஸ்சி)பாடங்களுக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கல்லூரியில் சுமார் 1,900 இடங்களுக்கு 11,216 மாணவர்கள் விண்ணப்பித் துள்ளனர்.

இதையடுத்து, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் முன்னிலையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் வாரிசு மற்றும்விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அவர்களில், 92 மாணவர்களுக்கு கல்லூரியில் படிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பொது ஒதுக்கீடுமாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு தரவரிசை அடிப்படையில் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழின் இரண்டு நகல்கள், 2 புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். பிஏ, பி.காம் மற்றும் பிபிஏ பாடங்களுக்கு ரூ.2,145, பிஎஸ்சி பாடத்துக்கு ரூ.2,165 மற்றும் பிஎஸ்சி கணினி அறிவியல் மற்றும் பி.காம் கணினிப் பயன்பாடு பாடங்களுக்கு ரூ.1,580 கல்வி கட்டணம் செலுத்த வேண்டும்.

செய்யாறு

இதேபோல், செய்யாறு அரசு கலைக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் கலைவாணி முன்னிலையில் சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

300-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 70-க்கும் மேற்பட்ட வர்களுக்கு கல்லூரியில் படிப் பதற்கான அனுமதி வழங் கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவின ருக்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE