பிச்சாவரம் சுற்றுலா மையம் 4 மாதங்களுக்கு பிறகு திறப்பு :

By செய்திப்பிரிவு

பிச்சாவரம் சுற்றுலா மையம் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்திற்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து சதுப்பு நிலக்காடுகளில் சுரபுன்னை மரங்களின் அழகை ரசித்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள். இது இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் பிச்சாவரம் சுற்றுலா மையம் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி மூடப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 4- மாதங்களுக்கு மேலாக பூட்டியிருந்த சுற்றுலா மையம் கரோனா கால தளர்வுகளின் அடிப்படையில் நேற்று திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ​

இதன்படி பிச்சாவரம் சுற்றுலா மையம் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்துசுற்றுலா பயணிகள் வந்திருந் தனர். இதனால் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் படகுகள் இயக்கப்பட்டன.

சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகுகளில் சவாரி சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்