ரேஷன் கடையை பக்கத்து கிராமத்துக்கு மாற்றியதை கண்டித்து பெண்கள் மனு :

By செய்திப்பிரிவு

இதுகுறித்து முத்தாலம்மன் மகளிர் சுய உதவிக்குழு ஊக்குநர் கார்த்திகைராணி கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 253 குடும்ப அட்டைகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் செயல்பட்ட ரேஷன் கடையை, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் பாதுகாப்பாக இல்லை எனக்கூறி, வெங்கடேஸ்வரா காலனிக்கு மாற்றினர். பின்னர் கடந்தாண்டு எங்கள் கிராமத்திலேயே கட்டிடம் கட்டிக் கொடுத்தோம். அதன்பின் 6 மாதங்கள் இங்கு ரேஷன் கடை செயல்பட்டது. இந்நிலையில் தற்போது புதிய கட்டிடத்திலும் பாதுகாப்பு இல்லை எனக்கூறி, வட்ட வழங்கல் அலுவலர் மீண்டும் வெங்கடேஸ்வரா காலனிக்கு கடையை மாற்றி விட்டார். இதனால் எங்கள் கிராம மக்கள் 2 கி.மீ. தூரம் நான்கு வழிச் சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. வயதானவர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே பாம்புவிழுந்தான் கிராமத்திலேயே மீண்டும் ரேஷன் கடையை அமைத்துத்தர வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்