உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அய்யாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாநில உதவி பொதுச் செயலாளர் குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஆபரேட்டர், தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாசன் உள்ளிட்ட அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து உரிய நடடிக்கை எடுக்க அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து கலைந்து சென்றனர்.

கிராம ஊராட்சி மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஆபரேட்டர், தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு-சிஐடியூ சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் திருமலை தலைமை வகித்தார்.

பின்னர் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்