குழந்தை திருமணங்களை தடுக்க அறிவியல் மாநாட்டில் தீர்மானம் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், கிருஷ்ணகிரி மாவட்ட 8-வது மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர்சர்ஜான் தலைமை வகித்தார்.

கிளை தலைவர் சரவணன் வரவேற்றார். மாநில செயலாளர் ராமமூர்த்தி தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் செயல் அறிக்கையும், பொருளாளர் சந்தோஷ் பொருள் அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எங்கள் தேசம் அறிவியல் தேசம் என்கிற தலைப்பில் மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி, கரோனா காலத்தில் கல்விநிலை என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் சேதுராமன் அறிவியல் பார்வை குறித்தும், சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கான நிரந்தர பணியிடங்கள் உருவாக்கவேண்டும்.

தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் இல்லை என்கிற நிலை உருவாக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக மலைக்கிராமங்களில் குழந்தை திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் பாதிப்புகளை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE