தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: 29-வது கட்ட விசாரணை தொடக்கம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணைய நீதிபதி மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கெனவே 28 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 813 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 1,150 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆணையத்தின் 29-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை விசாரணை நடைபெறுகிறது.

போராட்டத்தின்போது காயம் அடைந்த போலீஸாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், போராட்டத்தில் சேதம் அடைந்த காவல் துறை வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் உள்ளிட்ட 58 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று வழக்கறிஞர் ஹென்றி டிபேன் உள்ளிட்ட 10 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்