கிருஷ்ணகிரி அருகே - ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி ஊராட்சி புதூர் ஏரிக்கரையில் ரோட்டரி சங்கம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.

பனை மரங்களை காக்கவும், அவற்றை அதிகரிக்கவும் பனை விதை நடவுப் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்கட்டமாக நேற்று புதூர் ஏரிக்கரையில் 300 பனை விதைகளை விதைக்கும் பணியை கட்டிகானப்பள்ளி ஊராட்சித் தலைவர் காயத்திரிதேவி தொடங்கிவைத்தார்.

ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தும் நோக்கத்துடன் இவ்விதைகள் நீர்நிலைகளின் கரைகளில் விதைக்கப்படுகிறது. இதுதவிர தரிசு நிலங்களிலும் பனை விதைகள் விதைப்பு செய்யப்பட்டன.

தொடர்ந்து 10 ஆயிரம் பனை விதைகளை விதைத்து சூழல் மேம்பாடு, பனை மரங்களை காத்தல், பனை மரப் பொருட்களின் அருமைகளை இளைய தலைமுறையிடம் சேர்த்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சங்கீதா, சுரேஷ், பிரேம்குமார், விஜி, சித்ரா, கார்த்திகேயன், கட்டிகானப்பள்ளி வார்டு உறுப்பினர்கள் பால்ராஜ், மெரூன் ஆமீத், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்