மக்கள் நாடாளுமன்றம் நடத்த உள்ளோம் : இந்திய கம்யூ., மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி

By செய்திப்பிரிவு

மக்கள் நாடாளுமன்றம் என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக கடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

நாடாளுமன்றம் செயல்படாமலே 21-க்கும் அதிகமான மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை, உச்சநீதிமன்ற நீதிபதியே விமர்சனம் செய்துள்ளார். இதனால் வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் மக்கள் நாடாளுமன்றம் என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். இதில் மோடி அரசில் மக்கள் படும் துன்பங்களை விளக்க உள்ளோம்.

மக்கள் நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு தினந்தோறும் அனுப்பி வைப்போம்.

கொடநாடு விவகாரத்தில் கொலையும், கொள்ளையும் நடந்துள்ளன. அதில் ஈடுபட்டவர்கள் யாருக்காக ஈடுபட்டனர் என்பது தான் இப்போது கேள்வி. அப்படி இருக்கையில் அதிமுகவினர் சட்டப் பேரவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு இப்போது அதிமுக மீது சந்தேகம் வந்து விட்டது.

இந்த வழக்கை விசாரிக்க வேண்டியது இல்லை என்று ஒரு கட்சியின் நிர்வாகியே கூறுவது விந்தையாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் டி.மணிவாசகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்