மன்னார்குடி, தஞ்சாவூர் அரசு கலைக் கல்லூரிகளில் - மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம் :

By செய்திப்பிரிவு

மன்னார்குடி, தஞ்சாவூர் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று(ஆக.23) தொடங்குகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரியில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று(ஆக.23) தொடங்கி ஆக.26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு(விளையாட்டு, உடல் ஊனமுற்றோர், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அந்தமான் நிக்கோபார் அகதிகள் மட்டும்) இன்று(ஆக.23) காலை 9.30 மணிக்கும், தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று மதியம் 12 மணிக்கும் நடைபெறும்.

பொதுப் பிரிவினரில் தமிழ், ஆங்கிலம் நீங்கலாக மற்ற 4 பாடங்களில் 400-க்கு 380-லிருந்து 310 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை(ஆக.24) காலை 9.30 மணிக்கு தொடங்கி, மதியம் 3.30 மணி வரை நடைபெறும். அதேபோல, 310 மதிப்பெண்கள் முதல் 285 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆக.25-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும். இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆக.26-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2021-22-ம் ஆண்டுக்கான இளநிலை மாணவர் சேர்க்கை இன்று(ஆக.23) தொடங்கி செப்.1-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் சேர்க்கைக்கு வரும்போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச் செல்வி தெரிவித்துள்ளார்.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021-22 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை(ஆக.24) தொடங்குகிறது. இதில், அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நாளை(ஆக.24) நடைபெறும். இதர பாடப் பிரிவுகளுக்கு ஆக.24, 25, 26 ஆகிய நாட்களில் முதற்கட்ட கலந்தாய்வும், 27, 31, செப்.1 ஆகிய நாட்களில் 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெறுகிறது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்திலும், கல்லூரி அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, கல்லூரி சேர்க்கை கட்டணம் ஆகியவற்றுடன் கலந்தாய்வுக்கு வர வேண்டும். கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்படும் பாடப்பிரிவில் உடனே சேர்க்கை கட்டணம் செலுத்தி சேர்ந்துகொள்ளலாம். கட்டணம் கட்டி ரசீது பெற்றவர்களின் மாணவர் சேர்க்கையே உறுதி செய்யப்பட்டதாகும். தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்