தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரமேஷ் வரவேற்றார். துணைத் தலைவர் அழகிரிசாமி, இணைச் செயலாளர் காளிமுத்து, பயிற்சி இயக்குநர் சி.செல்வகுமார், சட்ட இயக்குநர் பூரண விஜயபூபாலன், சுற்றுச்சூழல் இயக்குநர் தர்மதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ரயில்பாதையில் இருவழித்தடத்தை செயல்படுத்தி, திருவாரூருடன் அனைத்துப் பகுதிகளையும் இணைக்க வேண்டும். திருவாரூரிலிருந்து தமிழகத்தின் தெற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில், அதிக ரயில் சேவைகளை இயக்க வேண்டும்.
காரைக்கால்- லோக்மான்ய திலக் மற்றும் மன்னார்குடி- பகத்கிகோதி விரைவு ரயில் ஆகியவை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இயக்கப்படுகின்றன. இவற்றில், ஏதாவது ஒரு ரயிலை திங்கள்கிழமைக்குப் பதிலாக வேறு ஒரு நாளில் மாற்றி இயக்க வேண்டும். வேளாங்கண்ணி- சென்னை இடையே தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். தற்போது, திருச்சியில் இருந்து இயங்கும் கொல்லம் விரைவு ரயிலை காரைக்காலில் இருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago