திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஒன்றியம் சுத்தமல்லியில் கிராமப்புற இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசால் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் திறக்கப்பட்ட இந்த அரங்கத்தில் சுத்தமல்லி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago