கடந்த 3 மாதங்களில் திருப்பூர் மாநகரில் காணாமல்போன 94 பேரில், 71 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா தெரிவித்தார்.
திருப்பூர் மாநகரில் காணாமல்போனவர்களை கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் சிறுபூலுவபட்டியில் நேற்று நடைபெற்றது. மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா தலைமை வகித்தார். துணை ஆணையர்கள் (சட்டம் மற்றும் ஒழுங்கு) செ.அரவிந்த் மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர், உறவினர்கள் பலர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மாநகரக் காவல் ஆணையர்வே.வனிதா கூறும்போது, "திருப்பூர்மாநகரில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காகவே தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 2015- 2011-ம் ஆண்டு வரை மொத்தம்2 ஆயிரத்து 371 காணாமல் போனவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 2 ஆயிரத்து155 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 216 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. 2019-ம் ஆண்டு 273 பேர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 246 பேரும், 2020-ம் ஆண்டு 290 பேரில், 269 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். அதேபோல், 2021-ம் ஆண்டில் தற்போது வரை 223 பேர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யபட்டு, 183 பேர் கண்டு பிடிக்கப் பட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் 94 பேர் காணாமல்போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் 3 சிறுவர், 12 சிறுமிகள், 15 குழந்தைகள் உட்பட 71 பேர் தனிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஒருவர்தற்கொலை செய்து கொண்டிருப்பதும், மற்றொருவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. காணாமல்போனவர்கள் குறித்த வழக்குகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், இது அவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்றாக இருக்கும். இந்தக் கூட்டம், விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர், உறவினர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்" என்றார்.
மனநிலை மாற்றம்?
வீட்டில் திட்டியதற்காக வீட்டை விட்டு வெளியேறுவது, பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறுவது என இன்றைய காலத்தில், குழந்தைகளின் மனநிலை வேறுவிதமாக மாறியுள்ளது. பெற்றோர், தங்கள்குழந்தைகளை கவனித்து வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இதுபோன்ற நிகழ்வுகள்நடந்துகொண்டேதான் இருக்கும்.எனவே, பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago