இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு மற்றும் பணியமர்த்தும் திட்டத்தின் கீழ், நகர்ப்புற இளைஞர்களுக்கு பல்வேறு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இளைஞர்களுக்கு தானியங்கி, கைத்தறி, தோல் பொருட்கள் தயாரித்தல் மற்றும் IT-ITES, LOGISTICS தொடர்பான பயிற்சிகள் வழங்குவதற்கு, உரிய நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி அளிக்க விரும்பும் நிறுவனங்கள், தேசிய திறன் வளர்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பிரதமர் கௌசல் கேந்திரா பயிற்சி மையங்களை கொண்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான கருத்துருக்களை மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்