செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தில் - ரூ.143.71 கோடியில் 224 சாலைகள் :

By செய்திப்பிரிவு

பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.143.71 கோடியில் 224 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூன்று பிரிவுகளாக 2000-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் கட்டமாக 2000-01 முதல்2018-19 வரை 403.00 கி.மீ. நீளத்தில் 192 சாலைகள் ரூ.90.90 கோடிமதிப்பில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக 2017-18 மற்றும் 2018-19-ல் 87.25 கி.மீ. நீளத்தில் 24 சாலைகள் மற்றும் 3 பாலங்கள் ரூ.39.30 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்டமாக 2020-21-ல் ரூ.13.51 கோடியில் 27.64 கி.மீ. நீளமுள்ள 8 சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 5.81 கி.மீ. நீளமுள்ள இரு சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் "நாட்டின் வளர்ச்சியில் சாலைகள் முக்கியப் பங்கு வகிக்கினறன. எனவே, உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, தரமான சாலைகளை அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் வேகத்தடை மற்றும் வளைவுகள் குறித்த அறிவிப்புப் பலகைகளை வைக்க வேண்டும். இதன்மூலம் விபத்துகளைத் தடுக்கலாம்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.செல்வகுமார், ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் மு.கவிதா, உதவி செயற் பொறியாளர்கள் மதுராந்தகம் பொ.சாந்தி, செங்கல்பட்டு அ.முகைதீன் பாத்திமா மற்றும் ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்