விருத்தாசலம் தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் நேற்று அமைச்சர் சி.வெ.கணேசன், நல வாரியங்களில் பதிவுசெய்துள்ள கட்டுமான தொழிலாளர்க ளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ர மணியம் தலைமையில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் .எம்.ஆர்.ராதா கிருஷ்ணன் முன்னிலையில் 667 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 25 லட்சத்து 80 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அமைச்சர் சி.வெ. கணேசன் கூறியது:
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 17.03.1999-ல்உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம் உருவாக்கப்பட்டது. அவரால் 2006 முதல் 2011 வரை 53 வகையான கட்டுமானத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக 16 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டன. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
புதிய ஆட்சி அமைந்த 50 நாட்களில் முதல்வர் ஸ்டாலின் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி யுள்ளார்.
அதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்து 128 தொழிலாளர்களுக்கு ரூ. 69 லட்சத்து 29 ஆயிரத்து 450 மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது என்றார். விருத்தாசலம் சார் -ஆட்சியர் அமித்குமார், தொழிலாளர் இணை ஆணையர் வேல்முருகன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) ரமேஷ்பாபு, தொழிலாளர் உதவி ஆணையர் ராமு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago