சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக - கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு மாதக்கணக்கில் காத்திருப்பு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பப்பை அகற்றுதல் அறுவை சிகிச்சைக்கு பெண்கள் உள்நோயாளியாக மாதக் கணக்கில் காத்திருக்கின்றனர்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப் போக்கு, கர்ப்பப்பையில் கட்டி போன்ற காரணங்களால் கர்ப்பப்பை அகற்றப்படுகிறது. சமீபகாலமாக கர்ப்பப்பை அகற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாதந்தோறும் 20-க்கும் மேற்பட்டோருக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் மகப்பேறு வார்டில் பிரசவம், குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பப்பை அகற்றுதல் போன்ற காரணங்களுக்காக 350-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் அந்த பிரிவில் 10 மருத்துவர்களே உள்ளனர். மேலும் அவர்கள் புறநோயாளிகளாக வரும் கர்ப் பிணிகளுக்கு மருத்துவ பரி சோதனை, ஸ்கேன் எடுத்தல் போன்ற பணிகளையும் கவனிக் கின்றனர். இதனால் அப்பிரிவில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள் ளது. இதையடுத்து கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே உள்நோயாளியாக 2 மாதங் கள் வரை பெண்கள் காத்திருக் கின்றனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தவிர்த்த மற்ற அரசு மருத்துவமனைகளில் பொது அறுவை சிகிச்சை மருத்துவர்களும் கர்ப்பப்பை அறுவைச் சிகிச்சையை செய்கின்றனர். சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 பொது அறுவை சிகிச்சை மருத்துவர்கள் உள்ளனர். அவர்களில் சிலரை மகப்பேறு பிரிவுக்கு மாற்றி கர்ப்பப்பை அகற்றுதல் அறுவை சிகிச்சையை துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்வோருக்கு சில சமயங்களில் ரத்தம் ஏற்ற வேண்டியுள்ளது. சிலருக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ஒப்புதல் பெறத் தாமதமாகிறது,’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்