சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆய்வு செய்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நேற்று காலை ராமநாதபுரம் வந்தார். மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம், இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு நீதிபதி மகிழேந்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், குடும்ப நல நீதிபதி பகவதி அம்மாள், தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், நீதித்துறை நடுவர் சிட்டிபாபு, உரிமையியல் நீதிபதி முல்லை ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து முதன்மை மாவட்ட நீதிமன்றப் பணிகளை ஆய்வுசெய்தார். ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, செயலாளர் நம்புநாயகம் உள்ளிட்டோரிடம் கலந்துரையாடினார். நீண்டகால நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறி ஞர்களிடம் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதன்பிறகு நீதிமன்ற நடைமுறைகளை பின்பற்றும் விதம் குறித்து பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago