ஆந்திராவிலிருந்து கொண்டு வந்த கிரானைட் கற்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி கனிம வள அலுவலர் பொன்னுமணி தலைமையில் அதிகாரிகள் மகாராஜாகடை பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர்.

அங்கு நின்ற லாரியை சோதனை செய்தபோது அதில் 6 பெரிய கிரானைட் கற்களை அனுமதியின்றி கொண்டு வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த கிரானைட் கற்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து வரட்டனப்பள்ளிக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அலுவலர் பொன்னுமணி கொடுத்த புகாரின் பேரில் மகாராஜாகடை போலீஸார் லாரியை பறிமுதல் செய்தனர்.

இதேபோல கந்திகுப்பம் அருகே செந்தாரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது 2 கிரானைட் கற்கள் அனுமதியின்றி கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கந்திகுப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்