நெல்லையில் தி ஐ ஃபவுண்டேஷன் : கண் மருத்துவமனை தொடக்கம் :

By செய்திப்பிரிவு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின், 13-வது கிளை மருத்துவமனை, திருநெல்வேலி கொக்கிரகுளத்தில், மாவட்ட அறிவியல் மையம் அருகில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்தனது சேவையைத் தொடங்கியுள்ளது.

இதுபற்றி, தி ஐ ஃபவுண்டேஷன் தலைவர் டாக்டர் டி.ராமமூர்த்தி கூறியதாவது:

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை தனது சேவையை அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலியில் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. திருநெல்வேலி மருத்துவமனையில், 6 மருத்துவ ஆலோசனை அறைகள், 5 பரிசோதனை அறைகள், கண்களை சோதனை செய்யும் 8 ஆப்டோமெட்ரி அறைகள், நவீன கண் கண்ணாடி சேவை, மருந்தகம், அனைத்து வசதிகள் கொண்ட நோயாளிகள் தங்கும் அறைகள், பகல் நேர நோயாளிகளின் ஓய்வு அறைகள் ஆகிய வசதிகள் உள்ளன. அதி நவீன கண்புரை அகற்றும் சிகிச்சை மூலம் கண்ணுக்கு அனைத்துவகை இன்ட்ராக்குலர் லென்ஸ்களை பொருத்துதல், லேசிக் சிகிச்சை, கண் விழித்திரைக்கான நவீன விட்ரக்டோமி சிகிச்சை, கண் அழுத்த சிகிச்சை, மாறுகண் சிகிச்சை, கண்ணைச் சுற்றி மேற்கொள்ளப்படும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கருவிழி மாற்று சிகிச்சை, கண் நரம்பியல் ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

திருநெல்வேலி மற்றும் அதன் பக்கத்து மாவட்ட மக்களுக்கு, ஆரம்பகால சிறப்புச் சலுகையாக இரண்டு மாதங்களுக்கு இலவச முழு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE