திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் கடை ஊழியர் அரிவாளால் வெட்டப் பட்டதை கண்டித்து கடைகள் அடைக்கப்பட்டன. வியாபாரிகளும் உறவினர்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
முக்கூடலில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று மாலையில் உணவு பார்சல் வாங்க வந்தவர்கள் பார்சல் வழங்க தாமதமானதால், அங்கிருந்த சிங்கம்பாறையை சேர்ந்த ஊழியர் சகாய பிரபு என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அங்கிருந்த கடைகள் அடைக்கப்பட்டன. காயமடைந்தவர் மீட்கப்பட்டு அங்கிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சகாயபிரபு அரிவாளால் வெட்டப்பட்டதை கண் டித்து வியாபாரிகளும், ஆதரவாளர்களும் ஆலங்குளம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது. ஏடிஎஸ்பி சீமைத்துரை தலைமையில் போலீஸார் அங்குவந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்வதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் போலீஸார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
முக்கூடலில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று மாலையில் உணவு பார்சல் வாங்க வந்தவர்கள் பார்சல் வழங்க தாமதமானதால், அங்கிருந்த சிங்கம்பாறையை சேர்ந்த ஊழியர் சகாய பிரபு என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago