இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல் :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் கரேனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ரூ.1 லட்சம் மதிப்பிலான 14 ஆக்சிஜன் செறிவூட்டிகள், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஒரு வென்டிலேட்டர், முக்ககவசங்கள், முழு உடல் பாதுகாப்பு கவசங்கள் என சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், இந்த உபகரணங்கள் மற்றும் பொருட்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் 7 வட்டார சுகாதார நிலையங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசும்போது, ‘‘கரோனா காலத்தில்மாவட்டத்தில் உள்ள மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு பிராண வாயு வழங்கிட மிகவும் கஷ்டப்பட்டோம். தற்போது, நிலைமை சீராகியுள்ளது. மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் தற்போது 145 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளன. புதிதாக ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை வழங்கிய செஞ்சிலுவை சங்கத்துக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிமாறன், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் ரகுநாதன், துணைத் தலைவர் லட்சுமணன் உள்ளட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்