மின்னல் தாக்கியதில் கோயில் கோபுரம் சேதம் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் திருமால் நகரில் மின்னல் தாக்கியதில் முத்துமாரியம்மன் கோயில் கோபுரம் சேதமடைந்தது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில், திருப்பத்தூர் திருமால் நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியதில் சிலைகள் சேதமடைந்தன.

மேலும், அப்பகுதியில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் சாதனப் பொருட்கள் பழுதடைந்தன. மின்னல் தாக்கியதில் கோயில் கோபுர சிலைகள் சேதமடைந்ததால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பரிகார பூஜைகள் நடத்தவும், சேதமடைந்த சிலைகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்