திருவண்ணாமலை அருகே நடைபெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த காட்டுதெள்ளூர் கிராமத்தில் வசித்தவர் சேகர்(35). இவர், திருக்கோவிலூரில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு தி.மலைக்கு ஆட்டோவில் நேற்று அதிகாலை வந்துள்ளார். திருவண்ணாமலை வட்டம் வெறையூர் அடுத்த சி.கல்லேரி கிராமத்தில் வந்த போது மழை பெய்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சேகர் உயிரிழந்தார். இது குறித்து வெறையூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தி.மலை அடுத்த கிளியாப்பட்டு கிராமத்தில் வசித்தவர் ராமசாமி மனைவி மனோன்மணி(62). இவர், திருவண்ணாமலை புற வழிச் சாலையில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு நேற்று முன் தினம் மாலை வீடு திரும்பினார். அப்போது அவர் மீது, சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலை யில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் மனோன்மணி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அன்றிரவு உயிரிழந்தார்.இது குறித்து தி.மலை கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago