:

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் காய்கறி விலை அதிகரித்துள்ள நிலையில், கோழி இறைச்சிக்கு இணையாக காளான் விலையேற்றம் கண்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் கேரட், முள்ளங்கி, பீட்ரூட், நூக்கோல், டர்னிப், முட்டைகோஸ், காலிஃப்ளவர், உருளைக் கிழங்கு, பீன்ஸ் பயிரிடப்படுகின்றன. இங்கிருந்து, சென்னை, பெங்களூரு, கேரளா மற்றும் பிற அண்டை மாநிலங்களுக்கு தினமும் சராசரியாக 10 டன் முதல் 15 டன் வரையிலான காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்தாண்டு மழை குறைவால், காய்கறி சாகுபடி குறைந்தது, தேவை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ரூ.100-க்குவிற்றுவந்த பட்டாணி தற்போது ரூ.180-க்கும், பீட்ரூட் ரூ.60-க்கும்,கேரட் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

நீலகிரி மாவட்ட காளான்உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்வினோத் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் காய்கறி விவசாயத்துக்கு அடுத்ததாக காளான் உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கரோனா காலத்தில் விற்பனை சரிந்ததால், செங்கல்பட்டு, பொள்ளாச்சி, கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் காளான் உற்பத்தியை விவசாயிகள் கைவிட்டனர். இதனால் வரத்துகுறைவு, ஓணம் பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் காளான்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ காளான் விலை ரூ.160-ல் இருந்து ரூ.300-ஆக உயர்ந்துள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்