தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை மத்திய அரசின் திட்டங்களை பிரதிபலிக்கிறது என்று பாஜக விவசாய அணியின் மாநிலத்தலைவர் ஜி கே நாகராஜ் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக வெளியிட்ட வேளாண் நிதி நிலை அறிக்கையில் உள்ளவை மத்திய அரசின் திட்டங்களை பிரதிபலிக்கிறது. தேர்தல்அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் எதையும் காப்பாற்றவில்லை. கரும்பு நிலுவைத்தொகைக்கு நிதி குறைவாக ஒதுக்கீடு செய்துள்ளனர். டெல்டா மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் வீணாகியுள்ளது. விதை நெல் தட்டுப்பாட்டை நீக்க முயற்சிக்கவில்லை. காவிரி- கோதாவரி இணைப்புக்கு மாநில அரசின் பங்கு தொகை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இந்த நிதி அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
நந்தன் கால்வாய் திட்ட பணிகளில் ஊழல் ,பணியில் குறைபாடு என்ற விவசாயிகளின் கோரிக்கை வைத்துள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ”உழவனோடு ஒரு நாள்” என்ற திட்டத்தின் மூலம் உழவர்களோடு தங்கி அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களை திமுகவினர் கையகப்படுத்தியுள்ளதக புகார் வருகிறது.
பட்டா வாங்கக்கூட பணம்கொடுக்க வேண்டிய நிலைஉள்ளது. தேர்தல் வாக்குறுதிகள்நிறைவேற்றப் படவில்லை. 100 நாள் ஆட்சி ஊடகங்களில் மட்டும் புகழப்படுகிறது. மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை.
அதிமுக மீது குற்றம் சாட்டியதிமுக. தன் ஆட்சியில் எவ்விதமாற்றத்தையும் கொண்டுவரவில்லை. திமுக பெட்டி வைத்து வாங்கிய மனுக்களின் நிலை என்ன ஆனது? ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதி அளித்தது திமுக, தற்போது கரோனா காலத்தில் மற்ற தேர்வுகளை ஒத்திவைத்தது போல நீட் தேர்வையும் ஒத்திவைக்கவேண்டும்.ரத்து செய்யவேண்டும் என தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வை வைத்து திமுக ஆட்சியை பிடிப்பதே நோக்கமாக இருந்தது என்றார். மாவட்டத் தலைவர் கலிவரதன், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி. சம்பத், விவசாய அணியின் மாநில தகவல் தொடர்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம், ஊடகப்பிரின் மாவட்டத்தலைவர் தாஸசத்தியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago