பாலியல் தொல்லை செய்த மாமனார் விஷம் வைத்து கொலை : குற்றத்தை ஒப்புக்கொண்ட மருமகள்

By செய்திப்பிரிவு

பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை கொலை செய்த மருமகளைப் போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவலைச் சேர்ந்தவர் முருகேசன் (56). இவரது மகன் வினோபாராஜனுக்கு திருமண மாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், முருகேசன் தனது மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனால், கடந்த 31.07.21 அன்று இரவு மாமனாருக்கு மருமகள் குழம்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட முருகேசனுக்கு தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து, பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆக.1-ம் தேதி சிகிச்சை பல னின்றி இறந்தார். தொடர்ந்து முருகேசனின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் முடிந்துள்ளன.

இந்நிலையில் கடும் மன அழுத்தத்தில் இருந்த அப்பெண் கீழத்தூவல் கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணனிடம் நடந்த சம்பவத்தை வாக்கு மூலமாகக் கொடுத்துள்ளார். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன் கீழத்தூவூல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்