1,000 இடங்களில் மக்கள் நாடாளுமன்றம்; இந்திய கம்யூ. முடிவு :

By செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம், மாவட்ட துணைச் செயலாளர் ஞான.மோகன் தலைமையில் கோட்டூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வை.செல் வராஜ், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் மற்றும் நிர்வாகி கள் பங்கேற்றனர். நாகை எம்.பி எம்.செல்வராஜ், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசினார். மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம் தீர்மானங் களை விளக்கிப் பேசினார்.

டெல்லியில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் போராடி வருவதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மின்சார திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றை எதிர்த்து பேச முடியவில்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இவற்றைக் கண்டித்து கிராமங் கள்தோறும் மக்கள் நாடாளு மன்றத்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், ஆக.23-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை திருவாரூர் மாவட்டத்தில் 1,000 இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடத்தப் படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்