தென்னை மட்டையிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஜெ.ஜெயரஞ்சன் ஆய்வு :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டையில், சென்னை தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் ட்ரோன்கள் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிப் பதற்கான செயல்விளக்கம் நேற்று செய்து காண்பிக்கப்பட்டது.

இதை மாநில கொள்கை வளர்ச்சிக் குழு துணைத் தலை வர் ஜெ.ஜெயரஞ்சன் பார்வை யிட்டார். அவருடன், திருவாரூர் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், கொள்கை வளர்ச்சிக் குழு உறுப் பினர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகி யோரும் இந்நிகழ்வை பார்வை யிட்டனர்.

அப்போது, வேளாண் தொழி லில் ட்ரோன்களின் பயன்பாடு, அதற்காக செலவிடப்படும் நேரம், இடுபொருட்களின் சிக்கனம் உள்ளிட்டவை குறித்து கேட்ட றிந்தனர்.

அதற்கு, இந்த ட்ரோன்களை தயாரிக்க ரூ.10 லட்சம் செலவாகும் எனக் கூறிய சென்னை நிறுவன பொறியாளர்கள், அரசின் அனு மதி பெற்று விவசாயிகளிடம் பரவலாக்கும்போது, இதன் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

முன்னதாக, மேலநாகை கிரா மத்தில் செயல்படும் தென்னை மட்டையிலிருந்து கயிறு தயாரிக் கும் தொழிற்சாலையில் ஜெய ரஞ்சன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தயாரிக் கப்படும் பொருட்கள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர், ஜெயரஞ்சன் கூறிய போது, “தமிழகம் முழுவதும் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப் பட்டு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கப்பூர்வ கருத்துகள் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்