தஞ்சாவூர் மக்கள் நீதிமன்றத்தில் 57 வழக்குகளுக்கு தீர்வு :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி சி.சுப்பையன் தலைமையில் நடைபெற்ற அமர்வில், சமூக ஆர்வலர் வி.செல்வம் பார்வையாளராக பங்கேற்றார்.

இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த உரிமையியல், மோட்டார் வாகன விபத்து, ஜீவனாம்ச வழக்குகள், குடும்ப வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்பட்டு, 57 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதில், 36 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 92 ஆயிரத்துக்கு தீர்வு காணப் பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலாளருமான பி.சுதா செய்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்