கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் - வீரிய நெட்டை தென்னை ஆய்வுத்திடல் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இயற்கை இனச்சேர்க்கை முறையிலான வீரிய நெட்டை தென்னைஆய்வுத்திடல் தொடங்கப்பட்டுள்ளது.

36 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுத் திடலில் முதல் நெட்டை தென்னங்கன்றை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் நட்டு வைத்தார். இயற்கைஇனச்சேர்க்கையின் மூலம் உருவாக்கப்பட்ட பலவகை நெட்டை ரக தென்னங்கன்றுகள் இந்த ஆய்வுத் திடலில் நடவு செய்யப்பட்டுள்ளன. இம்மாதிரியான வீரிய நெட்டை தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யும் ஆய்வுத்திடல், உலகளவில் பிலிப்பைன்ஸ் நாட்டில்மட்டும் உள்ளது. இரண்டாவதாக இந்தியாவில் தமிழகத்தில்கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

வீரிய உயர்ரக தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு கொடுத்துஉதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. “இந்த ஆய்வுத் திடலில் இருந்து பெறப்படும் வீரிய உயர் தென்னை ரகங்கள், வணீக ரீதியான தோட்டங்களை எழுப்புவதற்கும், அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதற்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்” என, கல்லூரி டீன் கே. இறைவன் அருட்கனி ஐயநாதன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்