தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77-வதுபிறந்த நாள் விழா கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் 77 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்பட்டது. மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், செந்தூர்பாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா நகர தலைவர் கே.டி.பி. அருண் பாண்டியன் தலைமையில் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் ஆர்.காமராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மகேஷ்குமார் பங்கேற்றனர்.
திருச்செந்தூரில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் வேல் ராமகிருஷ்ணன் தலைமையில் ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.சந்திரசேகரன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
திருநெல்வேலி
திருநெல்வேலியிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நடைபெற்றது.மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடிஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாநில ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயராகவன், சுப்பிரமணியன், கவிபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 77 பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. அத்துடன் கட்சி அலுவலகம் முன் காமராஜர் வெண்கலச் சிலை அமைப்பதற்கான வாஸ்து பூஜையும் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago