ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டம் மற்றும் கிராமச்சாலை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்து பேசும்போது, "கடந்த 2000-ம் ஆண்டில் பிரதம மந்திரியின் சாலை திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் 500 மக்கள் தொகையுள்ள குக்கிராமங்களுக்கு சாலை வசதி, முக்கிய இணைப்புச் சாலை அமைத்தல், சாலைகளை மேம்பாடு அடைய செய்வது முக்கிய நோக்கமாகும். மத்திய அரசின் நிதி மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குக்கிராமங்களில் இருந்து பள்ளிகள், சந்தை, மருத்துவ மனைகள் போன்றவற்றை இணைக்கும் பிரதான மற்றும் முக்கிய ஊரக இணைப்புச் சாலைகளை மேம்படுத்த இத்திட்டம் பெரும் பயனாக உள்ளது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 291 கி.மீ., நீளத்துக்கு 134 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, ரூ.76.76 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. ஊரக சாலைகள் கிராம பொருளாதாரத்தை சீர் செய்யும் பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
விவசாய வளர்ச்சிக்கு அடுத்து கிராமச்சாலைகள் கிராம மக்களின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு விளை பொருட்களை எடுத்துச் செல்லவும், நகரங்களில் இருந்து பல பொருட்கள் கிராமப்பகுதிக்கு கொண்டு செல்ல கிராம சாலைகள் அந்தந்த கிராம வளர்ச்சிக்கு பெரும் உதவியாக உள்ளன.
சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கும் சாலை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago