கண்ணாடி கழிவு ஏற்றிச்சென்ற லாரி : காவல் துறையினரிடம் ஒப்படைத்த எம்.பி.,

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து உடைந்த கண்ணாடி கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேலூர் வழியாக காஞ்சிபுரம் நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தது.

அந்த லாரி கிரீன் சர்க்கிள் பகுதியில் பள்ளம், மேடான பகுதியை கடந்தபோது லாரியில் இருந்து சில கண்ணாடி துண்டுகள் எகிறி கிழே விழுந்தன. அதன் மீது தார்பாய் எதுவும் மூடப்படாமல் ஆபத்தான முறையில் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது, வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவ் வழியாக காரில் சென்றபோது இதைப் பார்த்துள்ளார். அந்த லாரியை விரட்டிச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மடக்கி நிறுத்தினார். லாரி ஓட்டுநரிடம் ‘ஆபத்தான முறையில் ஏன் கண்ணாடியை ஏற்றிச் செல்கிறாய், யார் மீதாவது கண்ணாடி துண்டு பட்டால் ஆபத்து ஏற்படாதா’ என்று கேள்வி எழுப்பினார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, விரைந்து சென்ற சத்துவாச்சாரி காவல் துறையினர் லாரியை பறிமுதல் செய்ததுடன் கண்ணமங்கலம் காட்டுக்காநல்லூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் மனோகரன் (59) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்