விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு காரணமாக மாதந்தோறும் நடத்தப்பட்டு வந்த விவசாயி கள் குறைதீர்வுக்கூட்டம், கடந்த மாதம் முதல் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்காக விவசாயிகள் குறைதீர்வுக்கூட்டம் வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

திருப்பத்தூர் மற்றும் கந்திலி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஆதியூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலும், ஜோலார்பேட்டை மற்றும் நாட்றாம் பள்ளி வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நாட்றாம்பள்ளி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலும், வாணியம்பாடி வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வாணியம்பாடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலும், மாதனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கள் மாதனூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலந்து கொள் ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்