திருப்பூர் அருகே கடந்த 2 ஆண்டுகளாக தங்கி, தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 5 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் மங்கலம் புள்ளியம்பாளையத்தில் வங்க தேச நாட்டைச் சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக மங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர்.
அப்போது, வங்க தேசத்தை சேர்ந்த பர்கத் உசைன்(27), முகம்மது முத்தலிப்(26), சையதுல்லா இஸ்லாம்(24), அஷ்ரப் உள்(20), உஜல்(எ) முகமது உஜல் மியா(33) ஆகிய 5 பேர் அறை எடுத்து தங்கி, கடந்த 2 ஆண்டுகளாக பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்துவருவதும், அவர்களிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லையென்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து 5 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பாக, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago