கடலூர் மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் - 116 கி.மீ தூரம் கிராம சாலைகள் அமைப்பு :

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் பிரதம மந்திரி சாலைகள் திட்டம் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கடலூர் மக்களவை உறுப்பினர் ரமேஷ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கருத்தரங்கத்தை தொடக்கி வைத்து பேசியது:

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் 73சாலைகள் 232 கிலோ மீட்டர்நீளத்திற்கு தேர்வு செய்யப்பட் டுள்ளன. இதுவரை 44 சாலைகள் 116 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை பணிகள் முடிவுற்றுள்ளன. எஞ்சிய சாலை பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி மற்றும் திட்ட இயக்குநர்) பவன்குமார் ஜி.கிரியப்பனவர், செயற்பொறியாளர் பிரபாகரன், புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் விஜயகுமார், ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரத்தில் கருத்தரங்கம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பிரதமரின் கிராம சாலை திட்ட கருத்தரங்கு நடைபெற்றது. திட்ட அலுவலர் காஞ்சனா தலைமை தாங்கினார். இக்கருத்தரங்கில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாஸ்கர் பேசுகையில், பங்கேற்று சிறப்புரையாற்றியது:

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகள் 5 ஆண்டுகள் தொடர் பராமரிப்புக்கு மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இப்பணிகள் " eMARG" என்ற இணைய முகப்பின் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றார். ஊரக வளர்ச்சித் துறையின் செயற்பொறியாளர் ராஜா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்