சூளகிரி ஒன்றியத்தில் ரூ.1.49 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் தியாகரசனப்பள்ளி, அத்திமுகம், சந்தார செட்டிப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1.49 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல் காமன் தொட்டியில் முதன்மை பதப்படுத்தும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் பணிகள் குறித்து ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அப்போது எலவப்பள்ளி கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைத்து வெள்ளை சாமந்தி, ரோஜா மலர்கள் சாகுபடி செய்யும் பணிகள், தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து முதன்மை பதப்படுத்தும் நிலையில் பழங்கள், காய்கறிகள், தரம் பிரித்து விநியோகம் செய்வது தொடர்பாக, அலுவலர்களிடம் கேட்டறிந்த ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
ஆட்சியர் கூறும்போது, சூளகிரி ஊராட்சி ஒன்றி யத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பணிகளை தரமாகவும், விரைந்தும் முடித்து பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்களிடம், விவசாயப் பணிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சுப்பிரமணி, ஒன்றிய பொறியாளர்கள் மாதையன், தீபமணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குநர்கள் வேளாண்மை புவ னேஷ்வரி, தோட்டக் கலைத்துறை சிவக்குமார், வேளாண்மை அலுவலர் அருள்தாஸ், குருராஜன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago