சோனா கல்விக் குழுமம் மற்றும் வீ-டெக்னாலஜிஸ் சார்பில் - வீடு கட்டுவோருக்கு உதவும் : “சோனா ஹோம்” - செயலி அறிமுகம் :

சேலம் சோனா கல்விக் குழுமம் மற்றும் வீ-டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து சோனா ஹோம்-செயலியை அறிமுகம் செய்துள்ளன.

சேலம் சோனா கல்விக் குழுமம் மற்றும் வீ-டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிய சோனா ஹோம்-செயலி அறிமுக விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடத்தப்பட்டது. விழாவில், கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். கல்லூரி துணைத்தலைவர் சொக்கு வள்ளியப்பா முன்னிலை வகித்தார்.

சொக்கு வள்ளியப்பா கூறுகையில், ‘சோனா ஹோம்’ என்பது தனது சொந்த வீட்டைக் கட்டமைக்க விரும்பும் பயனர், விற்பனையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பில்டர்களுக்கு பயனுள்ள பல்துறை தகவல்களை வழங்கக்கூடிய மொபைல் பயன்பாடு ஆகும். இந்த செயலி மூலம் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை வீடுகளைக் கட்டுவது பற்றிய தெளிவான தகவல்களை பயனர் பெற முடியும்.

பயனர்கள் தங்கள் மனை அளவு மற்றும் இருப்பிடத்தின்படி, பயன்பாட்டிற்கான கட்டிடக்கலைத் திட்டத்தைப் பதிவிறக்குவதற் கான அணு கலைப் பெற முடியும்’ என்றார்.

சோனா கல்லூரி முதல்வர் செந்தில்குமார், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், கட்டிடவியல் துறைத்தலைவர் மாலதி ஆகியோர் கூறுகையில், சோனா ஹோம் செயலியானது, பொருள் விலை மற்றும் பிற விவரக்குறிப்புகள், அளவு, மாதிரிகள் போன்றவற்றைப் பற்றி பயனர்கள் தங்கள் கேள்விகளை விற்பனையாளர்களுக்கு இடுகை யிட முடியும். பொருட்களை வாங்குவதற்காக தகுந்த விற்பனையாளர்களை ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம்’ என்றார்.

விழாவில், சோனா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் காதர் நவாஷ், பேராசிரியர்கள் லோகநாதன், லோ கேஷ் குமார், வீ-டெக்னா லஜிஸ் நிறு வனத் தின் தென்ன வன் குழு மற்றும் சோனா கல்வி நிறுவனத் தின் குழு ஆகி யோர் கலந்து கொண்டனர். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE