தூத்துக்குடியில் 6 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடைசியாக கடந்த பிப்ரவரி 25-ம்தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகுசட்டப்பேரவை தேர்தல் மற்றும் கரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக இக்கூட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடியில் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கூட்டத்தை தொடங்கி வைத்து வேளாண்மை துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகள், திட்டங்கள் குறித்து விளக்கினார்.
மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரவேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்து விவசாயிகள் காணொலி காட்சி மூலம் குறைகளை எடுத்துக் கூறினர்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் சரவணன், வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிவேலாயுதம், கூட்டுறவு இணைப் பதிவாளர் சிவகாமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். மாவட்டம் முழுவதும் 12 வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்து மொத்தம் 55 விவசாயிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இவற்றுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளித்தனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் ஒருங்கிணைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago