பார்மலின் தெளிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை மற்றும் பல்லடம் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் உணவுப்பாதுகாப்பு மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்குள்ள ஒரு கடையில்,மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பார்மலின் தெளிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ மீன்களையும், தென்னம் பாளையம் மீன் சந்தையில் உண்ணத் தகுதியற்ற நிலையில்இருந்த 20 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-ன்கீழ் கடை உரிமையாளர்கள் 5 பேருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

இதுதொடர்பாக மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது ‘‘ பார்மலின் தெளிக்கப்பட்ட மீன்களை சாப்பிடு வோருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்