காஞ்சிபுரம் பொன்னேரி ஏரி புதர் மண்டிய நிலையில் உள்ளது. இந்தஏரியை தூர்வாரி புதர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் - சென்னை செல்லும் சாலையில் உள்ளது பொன்னேரி. இந்த ஏரி முறையான பராமரிப்பில்லாமல் புதர் மண்டிய நிலையில் உள்ளது. இந்த ஏரிக்குள் களைச் செடிகள் அதிக அளவில் முளைத்துள்ளன.
நிலத்தடி நீர்மட்டம் உயரும்
காஞ்சிபுரம் நகரை ஒட்டியுள்ள இந்த ஏரியில் நீர் இருக்கும்போது அருகாமையில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த ஏரி விவசாயத்துக்கு பயன்படாவிட்டாலும் நிலத்தடி நீர் மட்டம் உயர இந்த ஏரி முக்கியம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.இந்த ஏரியின் வழியாக ரயில்வே மேம்பாலம் செல்கிறது. இந்த மேம்பாலத்துக்காக ஏரியில் மிகப் பெரிய தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏரி நீரின் கொள்ளளவில் பாதிப்பு ஏற்படும் என்று, அப்போது சமூக ஆர்வலர்கள் எச்சரித்தனர்.
ஆனால், பொதுப்பணித் துறையினர் அப்போது ஏரி நீரில் கொள்ளளவுக்கு ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் வகையில் ஏரியை தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இப்போது ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில் இந்த ஏரியை தூர்வாரி அதில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும், கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago