நெல் அதிகம் விளைவிக்கப்படும் பகுதிகளில் - அரசு கொள்முதல் மையங்களை திறக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

காஞ்சி மாவட்டத்தில் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமங்கள், உத்திரமேரூர், வாலாஜாபாத் வட்டங்களில் அதிக அளவில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இந்த விவசாயிகள் அறுவடையின்போது விளைந்த நெல்லை தனியார் வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்வதாகவும், விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய வசதியாக நேரடி நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

விவசாயத் துறை மூலம் எங்கு நெல்விவசாயம் அதிகம் நடைபெறுகிறது என்பதை கணக்கீடு செய்து, அறுவடையின்போது அந்தப் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் மையங்களை திறக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேருவிடம் கேட்டபோது, "தனியார்விவசாயிகளிடம் ரூ.1,800 மதிப்புள்ளநெல்லை ரூ.900-க்கே கொள்முதல்செய்கின்றனர். இதனால் விவசாயிகள்கடும் பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே 15 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கஉள்ளதாக தெரிவித்தது. அதேபோல் விவசாயம் எங்கு அதிகம் நடைபெறுகிறதோ அங்கும் நேரடி நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும்.வியாபாரிகள் தனியாரிடம் குறைந்து விலைக்கு வாங்கி கொண்டு வந்து விற்கும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யக் கூடாது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்