காளையார்கோவில் அருகே கிராவல் மண் கடத்திய மூவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பிரண்டைக்குளம் குரூப் நற்கனி கண்மாய் மற்றும் தனியார் பட்டா நிலத்திலிருந்து கிராவல் மண் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த் துறையினர், போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த இளையான்குடி தினேஷ், நாட்டரசன்கோட்டை ரஞ்சித்குமார், கண்டிப்பட்டி காளீஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். ஜேசிபி இயந்திரம், லாரியை பறிமுதல் செய்தனர். மொத்தம் 202 யூனிட் வரை கிராவல் மண் அள்ளி கடத்தியது தெரியவந்தது. லாரி உரிமையாளர் தேவகோட்டையைச் சேர்ந்த பாலாமணி, ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் செங்குளிப்பட்டியைச் சேர்ந்த திவ்யா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago