அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 23 மருந்தாளுநர் தற்காலிக பணியிடம் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் கரோனா தடுப்பு பணிக்காக காலியாக உள்ள 23 மருந்தாளுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பு பணிக்காக 23 மருந்தாளுநர் பணியிடங்களை தகுதியின் அடிப்படையில் மாதம் என்கிற தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக 6 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. எனவே, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளில் மருந்தாளுநர் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு மருந்தாளுநர் கவுன் சிலில் பதிவு செய்து ஆண்டுதோறும் புதுப்பித்திருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்குள் தபால் அல்லது நேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்