தஞ்சாவூரில் தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழ் வழியில் அர்ச்சனை செய்யலாம் என தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை முழுமனதுடன் வரவேற்கிறோம். இவற்றை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதை அடையாளத்துக்குச் செய்துவிட்டு விடக்கூடாது. உச்ச நீதிமன்றம் 16.12.2015-ல் அளித்த தீர்ப்பில் அர்ச்சகராக சாதியோ, மொழியோ நிபந்தனை இல்லை. அர்ச்சனை செய்வதற்கு இந்த மொழிதான் என்ற நிபந்தனை கிடையாது எனக் கூறியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு ஏற்கெனவே 2006-ம் ஆண்டில் பிறப்பித்த ஆணை செல்லும். இதை முழுமையாகச் செயல்படுத்தி, அனைத்து கோயில் களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும். இதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago