தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்வ ராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்ற பிறகு, பொதுமக்களிடமி ருந்து 6,262 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றதில், அனைத்து மனுக் களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியா ளர்களிடம் அவர் மேலும் கூறியது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில், இத்திட் டத்தின் கீழ், 6,262 கோரிக்கை மனுக் கள் பெறப்பட்டு அனைத்து மனுக் களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், 36 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், 20 நபர் களுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் கல்விக்கடனுதவி, 27 நபர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு ரூ.20 லட்சம் மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல்வர் மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனையில் கரோனா வுக்கு சிகிச்சை பெற்ற 1,404 நபர் களுக்கு ரூ.12 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் வாழ்வாதா ரம் பாதிக்கப்பட்ட 6,69,334 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago